ஆவடி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் முன்னாள் தலைமை காவலர் மற்றும் அவரது மகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திருவள்ளூர் அருகே முருக்கஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (40). முன்னாள் தலைமை காவலரான இவர், தனது மகள் ப்ரீத்தியுடன் (13) மீஞ்சூரில் உள்ள தங்கை வீட்டில் இருந்து பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது வண்டலூர்- மீஞ்சூர் 400அடி வெளி வட்டச்சாலை ஆவடியை அடுத்துள்ள மோரை பகுதியில் வரும்போது அவர் ஓட்டிவந்த பைக் நிலை தடுமாறி சாலையில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதியது. இதில், அவரும் அவரது மகளும் பைக்குடன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் பாஸ்கர் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மகள் ப்ரீத்தி படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் ப்ரீத்தியை மீட்டு பாடியநல்லூர் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ப்ரீத்தி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் பாஸ்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Loading More post
'ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கிய நுபூர் ஷர்மா' - உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
`சுதந்திர தினம், குடியரசு தினம் போலத்தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நாளும்!’-ஆளுநர் கருத்து
”என் உடல் பலமாக இல்லைதான்; ஆனால் என் இதயம்..” - மனம் திறந்த நடிகை ஸ்ருதி ஹாசன்!
பினாமி பெயரில் இருந்த சசிகலாவின் சொத்துகள் - முடக்கிய வருமான வரித்துறை
`98.55% என்றானது கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம்!’- மத்திய அரசு தகவல்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide