Published : 18,Apr 2021 10:53 AM

கும்பமேளாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா சோதனை, தனிமைப்படுத்துதல் உத்தரவு

Mandatory-RT-PCR-test--home-quarantine--Check-state-wise-orders-for-Kumbhmela-returnees

ஹரித்வார் கும்பமேளாவில் கலந்துகொண்டு திரும்பியவர்களுக்கு கொரோனா சோதனை செய்யவும், வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளவும் பல மாநிலங்கள் உத்தரவிட்டிருக்கிறது.

நாடு முழுவதும் கொரோனாவைரஸின்இரண்டாவதுஅலைமிகவேகமாக பரவிவரும் சூழலில், ஹரித்வாரில் நடந்த கும்பமேளாவில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டது சர்ச்சையாகி வருகிறது. இந்த கும்பமேளாவில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே கும்பமேளாஒருசூப்பர்ஸ்ப்ரெடர்நிகழ்வாகஇருக்கக்கூடும்என்றஅச்சத்தில், உத்தரகண்ட்மாநிலத்தின்ஹரித்வார் கும்பமேளாவில் கலந்துகொண்டு ஊர் திரும்பியவர்களுக்கு பல மாநிலங்களும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது.

image

கும்பமேளாவில் இருந்து திரும்பியவர்கள் மூலமாக கொரோனா பரவுவதைத்தடுக்கும்முயற்சியில், பலமாநிலங்களும்கும்பமேளாவிலிருந்துதிரும்பிவருபவர்களுக்குஆர்டி-பிசிஆர்கொரோனா சோதனைமற்றும்வீட்டுதனிமைப்படுத்தலைகட்டாயமாக்கியுள்ளன.

மத்தியப்பிரதேசம், ஒடிசா, டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்கள் ஹரித்வாரில்கும்பமேளாவில் கலந்துகொண்டு திரும்பியவர்கள் தங்களைத்தாங்களே 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளவும், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும். மாவட்ட நிர்வாகம் மூலமாக இவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிட்டிருக்கிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்