[X] Close

வெற்றி கணக்கை தொடங்கியது சென்னை! 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வென்றது!

ஐபிஎல் திருவிழா

Chennai-Super-Kings-registered-its-first-win-of-the-IPL-2021-Season-by-six-wickets-against-Punjab-Kings

நடப்பு ஐபிஎல் சீசனில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது சென்னை. முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்களை குவித்தது. 


Advertisement


Advertisement

அந்த சுலப இலக்கை விரட்டிய சென்னை அணிக்காக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டூப்ளசி இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். கெய்க்வாட் 16 பந்துகளுக்கு 5 ரன்கள் எடுத்த நிலையில் அர்ஷ்தீப் சிங் பந்து வீச்சில் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த மொயின் அலியுடன் டுப்ளசி கூட்டணி அமைத்தார். இருவரும் 66 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மொயின் அலி 29 பந்துகளில் 46 ரன்களை குவித்து அவுட்டானார். 7 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் விளாசி இருந்தார் அவர். 


Advertisement

தொடர்ந்து ரெய்னா களத்திற்கு வந்தார். அவர் எதிர்கொண்ட இரண்டாவது பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார். இருப்பினும் ஷமி வீசிய ஷாட் பாலில் ரெய்னா 8 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். ராயுடு முதல் பந்திலேயே பெரிய ஷாட் ஆட முயன்று டக் அவுட்டானார். டுப்ளசி திறம்பட ஆடியதால் ஷமி ஹாட்ரிக் விக்கெட் எடுக்கும் வாய்ப்பை இழந்தார். 

இறுதியில் 15.4 ஓவர்களில் 107 ரன்களை குவித்து வெற்றி பெற்றது சென்னை. வெற்றியை பவுண்டரி அடித்து உறுதி செய்தார் ‘கடைக்குட்டி சிங்கம்’ சாம் கரன். டூப்ளசி இறுதி வரை களத்தில் நின்று 33 பந்துகளில் 36 ரன்களை குவித்தார்.


Advertisement

Advertisement
[X] Close