[X] Close

ஏமன்: ஹிஜாப் அணியாமல் விளம்பர படத்திற்கு போஸ் கொடுத்த மாடலை கடத்திய பயங்கரவாதிகள்!

உலகம்

Entisar-Al-Hammadi-a-20-year-old-Model-abducted-in-Yemen-by-Houthi-militia-terrorist-group-for-posing-without-Hijab

ஹிஜாப் அணியாமல் விளம்பர படத்திற்கு போஸ் கொடுத்த 20 வயதான நடிகை மற்றும் மாடலுமான என்டிசார் அல் ஹம்மடி மற்றும் அவருடன் பணியாற்றும் இருவரை ஏமனில் பயங்கரவாதிகள் கடத்திக் கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம்  அவர்கள் ஷூட்டிங் நடிப்பதற்காக வாகனத்தில் போய் கொண்டிருந்தபோது நடந்துள்ளது. அந்த வாகனத்தை மடக்கி பிடித்த பயங்கரவாதிகள் அவர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர். 

இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது Houthi militia என்ற பயங்கரவாத அமைப்பு என தெரியவந்துள்ளது. இதனை அந்த நாட்டின் தகவல் துறை அமைச்சர் மோம்மர் அல்-எரியானி தெரிவித்துள்ளார். அதோடு பயங்கரவாதிகளின் செயலுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

சுமார் ஒரு மாத காலமாக கடத்தி வைத்துக் கொண்டு எந்தவொரு நிபந்தனையையும் பயங்கரவாதிகள் வைக்காமல் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான இந்த குற்ற செயலை செய்த அவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கடத்தலில் ஈடுபட்ட Houthi militia பயங்கரவாத அமைப்பினர் ஈரானை சேர்ந்தவர்கள். 


Advertisement

Advertisement
[X] Close