[X] Close

அரியலூரில் தூக்கில் தொங்கிய பெண்! - போலீசார் விசாரணை

தமிழ்நாடு

Problem-with-husband--Pregnant-woman-hanging-

அரியலூர் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண் தூக்கில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இறந்தப் பெண்ணின் உடலை மீட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement

அரியலூரில் கீழநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரனின் மனைவி இந்துமதி. இத்தம்பதியருக்கு ஏற்கெனவே இரண்டரை வயதில் மகன் உள்ள நிலையில், இந்துமதி மீண்டும் கருவுற்றுள்ளார். இந்துமதிக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

image


Advertisement

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்துமதி தூக்கில் தொங்குவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். உடலை மீட்டு கூராய்விற்கு அனுப்பிய காவல்துறையினர், இந்துமதியின் தந்தை அளித்த புகாரின் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close