Published : 16,Apr 2021 12:24 PM

டெல்லி: மத்திய அரசு அதிகாரிகள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்

Central-Government-officers-can-do-work-from-home-in-Delhi

கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் டெல்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள அதிகாரிகள் வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கிறது.எனவே டெல்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி 50 விழுக்காடு ஊழியர்களுடன் அலுவலகங்கள் செயல்படலாம்.

வீட்டில் இருந்து பணியாற்றும் வாய்ப்பு உள்ளவர்கள் அந்த முறையையே பின்பற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாடு பகுதியில் இருப்பவர்கள் அலுவலகத்திற்கு வர கூடாது என்றும் அலுவலகங்களில் தனி மனித இடைவெளியை பின்பற்றுவது, முகக்கசவம் அணிவது உள்ளிட்டவை கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டங்களை காணொலி வாயிலாக மட்டுமே நடத்த வேண்டும், என கூறியுள்ள அரசு, 45 வயதுக்கு மேற்பட்ட அதிகாரிகள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்