[X] Close

மீண்டும் ஈ.வெ.ரா சாலையான கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு - நள்ளிரவில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்

தமிழ்நாடு

Grand-Western-Trunk-Road-was-renamed-E-V-Ra-periyar-in-chennai

சென்னையில் கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என மாற்றப்பட்ட சாலை மீண்டும் இரவோடு இரவாக பெரியார் ஈ.வெ.ரா. சாலை என மாற்றம் செய்து ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. 

பூந்தமல்லி நெடுஞ்சாலையை எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டார். இந்த நிலையில், அண்மையில் அச்சாலை கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என பெயர் மாற்றப்பட்டது.

image


Advertisement

இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த பெயர் பலகை மை பூசி அழிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றிரவு கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்ற பெயரை மறைத்து பெரியார் ஈ.வெ.ரா சாலை என மீண்டும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.  


Advertisement

Advertisement
[X] Close