Published : 24,Jul 2017 03:41 PM

24 நினைவுச் சின்னங்களைக் காணவில்லை: மத்திய அரசு 

Central-government-24-missing-monuments

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 24 நினைவுச் சின்னங்களைக் காணவில்லை என்றும், தேடிக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அவை இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா, அருணாச்சலப் பிரதேசத்தின் காப்பர் கோவில், அசாமின் டின்சுகியா மாவட்டத்தில் உள்ள பேரரசர் ஷேர் ஷாவின் துப்பாக்கிகள், டெல்லியில் உள்ள பாராகம்பா நினைவிடம் மற்றும் மேற்குவங்கத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள பாமன்புகுர் கோட்டையின் இடிபாடுகள் உள்ளிட்டவைகள் காணாமல் போன நினைவுச் சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். 

இந்த பட்டியலில் உத்தரப் பிரதேச மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது. இங்கு 11 நினைவுச் சின்னங்கள் காணாமல் போயுள்ளது. ஹரியானா, டெல்லி, மகராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா 2 நினைவுச் சின்னங்கள் காணாமல் போயுள்ளது. அசாம், அருணாச்சலப்பிரதேசம், உத்தராகண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு நினைவுச் சின்னம் காணாமல் போயுள்ளது. நினைவுச்சின்னங்கள் காணாமல் போவதற்கு நகரமயமாக்கலே முக்கியமான காரணம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்