Published : 16,Apr 2021 07:02 AM
இமாச்சலப் பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு!

இமாச்சலபிரதேச மாநிலத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இமாச்சலபிரதேச மாநிலத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் கங்ரா மாவட்டத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 3.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் சற்று அதிர்ந்தன. உயிரிழப்போ, பொருட்கள் சேதமோ எதுவும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.