Published : 24,Jul 2017 03:29 PM
மக்களவையில் அமளி: காங்.உறுப்பினர்கள் 6 பேர் 5 நாட்கள் இடைநீக்கம்

மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாக கூறி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 உறுப்பினர்களை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
போபர்ஸ் பீரங்கி ஊழல் விசாரணையை சிபிஐ மீண்டும் தொடங்க வேண்டும் என்று பாஜக சார்பில் கோரிக்கை விடப்பட்டது. பாஜக எம்பி மீனாட்சி லேகி போபர்ஸ் பீரங்கி ஊழலை மீண்டும் விசாரிக்க வேண்டும் என கோரினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனை எதிர்த்து காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆவணங்களை கிழித்து எறிந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கை முடங்கியதால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோகாய், ரஞ்சித் ரஞ்சன், எம்.கே.ராகவன் உள்பட 6 எம்.பிகளை 5 நாட்களுக்கு இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.