[X] Close

’காரில் செல்பவர்கள் எதுக்கு மாஸ்க் போடணும்’ - அபராதம் விதித்த காவலருடன் சிறுமி வாக்குவாதம்

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

Not-wearing-mask-girl-was-fined-by-police-gets-into-rift

காருக்குள் அமர்ந்து செல்லும் போது முகக் கவசம் அணியாமல் சென்ற சிறுமிக்கு காவல்துறையினர் அபராதம் விதித்ததால் ஆத்திரமடைந்த சிறுமி, பெண் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது.

திருச்செந்தூர் பகுதியில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களை பிடித்து காவல்துறையினர் உடனடியாக அபராதம் விதிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேநீர் கடை முதல், வணிக வளாகங்கள் என அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவர்களிடம் அபராதம் வசூலிக்கின்றனர். பேருந்து ஒன்றில் காவலர்கள் சோதனை செய்வதையறிந்த இளைஞர் ஒருவர், தான் வைத்திருந்த கர்சீப்பை முகக்கவசமாக மாற்றினார்.

ஆனால் அவரை எச்சரித்த காவல்துறையினர் அவருக்கு அபராதம் விதித்தனர். காரில் தந்தையுடன் சென்ற சிறுமி முகக்கவசம் அணியாததால், காவல்துறையினர் 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அவரது தந்தையிடமிருந்து அபராதத் தொகையை வசூலிக்கும் போது கோபமடைந்த சிறுமி, காரில் செல்பவர்கள் எதுக்கு மாஸ்க் அணிய வேண்டும் என ஆங்கிலத்தில் கேட்டபடி பெண் காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


Advertisement

தனக்கு ஆங்கிலம் தெரியாது எனக்கூறி, காவலரும் சிறுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் தனக்கு கொரோனா ஒன்றும் இல்லை எனக்கூறிய சிறுமி கோபமுடன், காரில் ஏறிச் சென்றார்.


Advertisement

Advertisement
[X] Close