[X] Close

RR vs PBKS : டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி ஃபீல்டிங் தேர்வு!

விளையாட்டு,ஐபிஎல் திருவிழா

RR-versus-PBKS-Match-number-4-IPL-2021-and-Rajasthan-Royals-won-the-toss-elected-to-field-first

நடப்பு ஐபிஎல் சீசனின் நான்காவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடுகின்றன. இந்த ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இரு அணிகளும் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற ஏலத்தில் புதிய வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளன. இந்நிலையில் இந்த ஆட்டதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அவர் முதல்முறையாக அணியை வழிநடத்துகிறார். 


Advertisement

அதனால் பஞ்சாப் அணி முதலில் பேட் செய்கிறது. கடந்த சீசனில் நல்ல பர்பாமென்ஸ் கொடுத்தும் பிளே ஆப் வாய்ப்பை இழந்தது பஞ்சாப் அணி. இந்த முறை புதிய பெயருடன் களம் காண்கிறது. எப்படியேனும் முதல் முறையாக  கோப்பை வென்று விட வேண்டுமென்ற நோக்கத்துடன் அந்த அணி விளையாடுகிறது. 

ராஜஸ்தான் அணியும் இந்த சீசனில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் நோக்கத்துடனே விளையாடுகிறது. 


Advertisement

Advertisement
[X] Close