[X] Close

டிவில்லியர்ஸ்; வாஷிங்டன்; சிராஜ் - ஒரே நேரத்தில் 3 பேரை சதுரங்கத்தில் எதிர்த்த சாஹல்!

விளையாட்டு

IPL-2021-RCB-Player-Yuzvendra-Chahal-plays-Chess-against-teammate-AB-de-Villiers-Washington-Sundar-and-Mohammad-Siraj-at-the-same-time

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மிக முக்கிய வீரருமாகிய சாஹல் ஒரே நேரத்தில் டிவில்லியர்ஸ், வாஷிங்டன் சுந்தர், சிராஜ் என மூவருக்கும் எதிராக தனித்தனியே சதுரங்கம் விளையாடி அசத்தியுள்ளார். அந்த படத்தில் நான்கு பேரும் ஆர்சிபி அணியின் ஜெர்சியில் உள்ளனர். 


Advertisement

சாஹல் மூவருக்கும் எதிராக நின்று கொண்டு செஸ் விளையாடுகிறார். நாற்காலியில் அமர்ந்துள்ள டிவில்லியர்ஸ், வாஷிங்டன் சுந்தர், சிராஜுக்கு எதிராக மூன்று செஸ் போர்டுகள் உள்ளன. “அரசனின் சதுரங்க ஆட்டம்” என கேப்ஷன் போட்டு படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் சாஹல். 

View this post on Instagram

A post shared by Yuzvendra Chahal (@yuzi_chahal23)


Advertisement

கிரிக்கெட் விளையாடுவதற்கு முன்பு சாஹல் சதுரங்க விளையாட்டில் தனி சாம்ராஜ்யம் செய்து வந்தவர். இந்தியாவுக்காக சதுரங்க விளையாடிய வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி வரும் 14 ஆம் தேதியன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. 4 பேரும் நடப்பு சீசனில் அந்த அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர். 


Advertisement

Advertisement
[X] Close