Published : 12,Apr 2021 06:20 PM
தமிழகத்தில் 7000- ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் தினசரி கொரோன பாதிப்பு 7 ஆயிரத்தை நெருங்கியது. 82,202 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதில் இன்று ஒரேநாளில் தமிழகத்தில் 6,703 வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 8 பேர் என 6,711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் ஏற்கெனவே 2,124 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாவது நாளாக 2000-ஐ கடந்தது. கடந்த 24 மணிநேரத்தில் 2,105 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக மேலும் 19 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,927ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 46,308ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 2,339 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 8,80,910 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.