கேரளா: கழுத்தில் இறுகிய கம்பி; குட்டிகளுடன் தவித்து வரும் தாய்நாய்! - கலங்கும் மக்கள்

கேரளா: கழுத்தில் இறுகிய கம்பி; குட்டிகளுடன் தவித்து வரும் தாய்நாய்! - கலங்கும் மக்கள்
கேரளா: கழுத்தில் இறுகிய கம்பி; குட்டிகளுடன் தவித்து வரும் தாய்நாய்! - கலங்கும் மக்கள்

கேரள மாநிலம் பழைய மூணாறு பகுதியில் கழுத்தில் கம்பி இறுக்கியவாறு குட்டிகளுடன் உலவும் தாய் நாய் காண்போரை கண்கலங்க செய்துள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பழைய மூணாறு பகுதியில் பெண் கர்ப்பிணி நாய் ஒன்று கழுத்தில் கம்பி இறுகியவாறு இரண்டு வாரத்திற்கும் மேலாக சுற்றிவந்தது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் நாயின் கழுத்தில் இருந்த கம்பியை அகற்ற எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனால் எந்த முயற்சியும் பலனிக்கவில்லை.

இதனிடையே தாய்நாய் ஐந்திற்கும் மேற்பட்ட குட்டிகளை ஈன்ற நிலையில், இதுகுறித்து மூணாறு ஊராட்சிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால், அங்கிருந்து வந்தவர்களாலும் நாயை நெருங்க முடியவில்லை.

தற்போது வனவிலங்கு ஆர்வலர்கள் மூணாறு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறை சார்பில் நாயின் உடம்பில் மயக்க ஊசி செலுத்தி நாயின் கழுத்தை இறுக்கியிருக்கும் கம்பியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கழுத்தில் கம்பி இறுகியதால் தாய் நாய் உணவு உண்ண இயலாமல் தவித்து வருவது அந்தப்பகுதி மக்களை கண்கலங்க செய்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com