[X] Close

கொரோனா அச்சமின்றி ஹரித்வாரில் கும்பமேளாவுக்காக குவிந்த மக்கள்!

இந்தியா,கொரோனா வைரஸ்

கொரோனா அச்சம் நீடிக்கும் நிலையில், கும்பமேளாவையொட்டி ஹரித்வார் கங்கை நதிக்கரையில் புனித நீராட ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.


Advertisement

தனிமனித இடைவெளியை மறந்து கங்கையில் புனித நீராடல் நடைபெற்று வருகிறது. வரும் 30-ஆம் தேதி வரை கும்பமேளா நடக்கும் நிலையில் இன்று, ஏப்ரல் 14 மற்றும் ஏப்ரல் 27 ஆகிய தேதிகள் புனித நீராடலுக்கு உகந்த நாட்கள் என்று அறியப்படுகிறது. ஒரே இடத்தில் பக்தர்கள் குவியாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்ட அதேநேரத்தில், தொற்று பரிசோதனைகளை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement
[X] Close