[X] Close

தொழிலதிபர் யூசுப் அலி பயணம் செய்த ஹெலிகாப்டர் கேரளாவில் தரையிறக்கம்... நடந்தது என்ன?

இந்தியா

A-helicopter-in-which-Indian-Business-Tycoon-Yusuf-Ali-was-travelled-make-an-emergency-Landing-in-Kerala

கேரளாவை சேர்ந்தவர் தொழிலதிபர் யூசுப் அலி. 65 வயதான அவர் குடும்பத்துடன் ஹெலிகாப்டரில் பயணித்துள்ளார். அப்போது நடுவானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென காலி மனை ஒன்றில் தரையிறக்கப்பட்டது. இந்த ஹெலிகாப்டர் யூசுப் அலிக்கு சொந்தமனது என்ற தகவலும் வெளியாகி உள்ளது. 


Advertisement

“காலை 9 மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. யூசுப் அலியையும் சேர்த்து மொத்தம் 5 பேர் ஹெலிகாப்டரில் பயணித்துள்ளனர். அவர்கள் அனைவரும் வீட்டிலிருந்து புறப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்திற்கான காரணம் தெரியவில்லை. இதில் பயணம் செய்த அனைவரும் தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என பனங்காடு காவலர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள பனங்காடு - கும்பளம் சுங்கச் சாவடி அருகே நடைபெற்றுள்ளது. ஹெலிகாப்டர் தரை இறக்கப்பட்ட காரணம் தொழில்நுட்ப கோளாறு என தெரிகிறது. கேரளாவில் ஞாயிறு அன்று அதிகாலை மழை பொழிவும் இருந்தது. 


Advertisement

குடியிருப்பு பகுதி என்றாலும் விமானி சாமர்த்தியமாக ஹெலிகாப்டரை தரையிறக்கினார் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். 


Advertisement

தகவல் : THE NEWS MINUTE 


Advertisement

Advertisement
[X] Close