[X] Close

வைரஸ் காய்ச்சல்… முதல் டெஸ்டை மிஸ் செய்யும் ராகுல்

KL-Rahul-to-miss-first-test-against-SL

வைரஸ் காய்ச்சல் காரணமாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல், இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்க மாட்டார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

சமீபத்தில் முடிந்த இலங்கை கிரிக்கெட் வாரிய பிரசிடென்ட் லெவன் அணியுடனான போட்டியில் அரைசதமடித்த ராகுல், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதை பிசிசிஐ மருத்துவர் குழு உறுதி செய்துள்ளது. காய்ச்சலால் அவதிப்படும் ராகுலை சில நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர் குழு அறிவுறுத்தி இருப்பதால் காலேவில் வரும் 26ல் தொடங்கும் இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்டில் ஆட மாட்டார் என்று பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகுலுக்கு பதிலாக ஷிகர் தவானுடன் தொடக்க வீரராக தமிழகத்தைச் சேர்ந்த அபினவ் முகுந்த் களமிறங்குவார் என்று தெரிகிறது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய தொடர்களில் ராகுல் பங்கேற்கவில்லை. 
 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close