Published : 24,Jul 2017 07:32 AM

மாணவர்களுக்கு கல்லூரிகளில் டிரைவிங் லைசன்ஸ்!

driving-license-to-be-given-in-delhi-colleges-soon

டெல்லியில் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரியிலேயே ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான நடைமுறைகள் செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட இருப்பதாக, டெல்லி போக்குவரத்துத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட், ’தற்போது ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிப்பவர்களில் பெரும்பாலானோர் 18 முதல் 24 வயதுடையவர்கள். அதில் பெரும்பாலானோர் கல்லூரி மாணவர்கள். ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக விண்ணப்பதாரர் உரிமம் வழங்கும் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டியிருக்கிறது. இந்த நடைமுறையை எளிதாக்க, கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரியில் ஓட்டுநர் உரிமம் வழங்கும் முறையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமத்தை பெற கல்லூரி மாணவர்கள் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். 10 மதிப்பெண் கொண்ட தேர்வை எழுத வேண்டும். அதில் குறைந்த பட்சம் 6 மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். தேர்வை இந்தி அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம். இந்த திட்டம் முதலில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் பிறகு மற்ற கல்லூரிகளிலும் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தை செப்டம்பர் மாதம் முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.   

 

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்