Published : 10,Apr 2021 02:46 PM
ஆன்லைன் சந்தை விதிமீறல்: அலிபாபா குழுமத்திற்கு ரூ.20,550 கோடி அபராதம்

ஆன்லைன் சந்தை விதிகளை மீறியதற்காக அலிபாபா குழுமத்திற்கு , இந்திய மதிப்பில் சுமார் ரூ.20,550 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அலிபாபா குழுமத்திற்கு சொந்தமான தளங்களில் தங்களது பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்கள், பிற தளங்களில் தங்களது பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என அக்குழுமம் தடுத்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் அலிபாபா குழுமம் ஆன்லைன் சந்தை விதிமுறைகள மீறியதோடு மேலாதிக்க சந்தை நிலையை முறை தவறி பயன்படுத்தியுள்ளதாக சீன அரசு குற்றம் சாட்டியுள்ளது.
அதற்கு கடந்த 2019 ஆம் குழுமம் ஈட்டிய வருமானத்தில் 4 சதவீதத்தை அதவாது 18 பில்லியன் யுவான் (2 பில்லியன் டாலர்கள்), இந்திய மதிப்பில் சுமார் 20,550 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம் பொதுநிகழ்ச்சி ஒன்ரில் பேசிய அலிபாபா குழும தலைவர் ஜாக்மா சீன அரசின் ஒழுங்குமுறை அமைப்பு குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதனைத்தொடர்ந்து டிசம்பர் மாதம் சந்தை ஒழுங்குமுறைக்கான சீனாவின் மாநில நிர்வாகம் அவரது நிறுவனத்தை விசாரணைக்கு உட்படுத்தியது குறிப்பிடத்தக்கது.