[X] Close

பெண் வேடத்தில் தீவிரவாதிகள்: வைரலாகும் புகைப்படங்கள்

IS-Terrorists-in-the-role-of-a-woman

மொசூல் நகரில் தீவிரவாதிகள், பெண் வேடமிட்டு உலா வரும் பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஈராக் நாட்டின் பெரிய நகரங்களில் ஒன்றான மொசூல் நகரை ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து ஈராக் ராணுவம் முற்றிலுமாக மீட்டது. 

இந்நிலையில், மொசூல் நகரம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதால் அங்கு மக்களோடு மக்களாக, ஐஎஸ் தீவிரவாதிகள் மறைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் பெண்  வேடமிட்டு அந்த பகுதியில் சுற்றி திரிந்து வருகின்றனர். பர்தா அணிந்துகொண்டு, முகத்தில் மேக்கப் போட்டுக் கொண்டு என தங்களை பெண்களாக மாற்றியுள்ளனர். அதில் ஒரு தீவிரவாதி தனது முகத்தில் ஷேவ் செய்ய மறந்துள்ளார். இவர் இராணுவத்தினரிடம் சிக்கியதை அடுத்து, தொடர்ந்து அந்த நகரில் தேடுதல் வேட்டை நடைபெற்றது. இதை தொடர்ந்து பெண்கள் ஆடையுடன் பெண் உருவத்தில் உலாவரும் பல ஐஎஸ் தீவிரவாதிகள் சிக்கியுள்ளனர். அவர்களின் புகைப்படத்தை இராணுவத்தினர் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement


 


Advertisement

Advertisement
[X] Close