Published : 09,Apr 2021 07:40 PM

கொரோனா பரவல் எதிரொலி - ’தலைவி’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு

Kangana-Ranaut-Thalaivi-postponed-amid-rising-COVID-19-cases

தலைவி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து படக்குழு வெளியிட்ட அறிக்கையில், “மிக சவாலான இந்தப்பயணத்தில் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பை தந்த படக்குழுவைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் எங்களது நன்றிகள். பல மொழிகளில் உருவாகியுள்ள ‘தலைவி’ திரைப்படம் ஒரே நாளில் அனைத்து மொழிகளிலும் வெளியாக இருந்தது.

image

கொரோனா தொற்று அதிகரித்து வரும் இந்தச் சூழ்நிலையிலும் கூட பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து நாங்கள் படத்தை ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியிட தயாராக இருக்கிறோம். இருந்த போதிலும் அரசின் கட்டுப்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், தலைவி படத்தின் ரீலிஸ் தேதி தள்ளிவைக்கப்பதாக நாங்கள் முடிவெடுத்துள்ளோம். உங்களின் அன்பு தொடர்ந்து கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்