ஜிஎஸ்டி வரிவிதிப்பால் தமிழ்த் திரையுலகம் கடும் விளைவை சந்திக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அதையும் தாண்டி ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்து வந்திருப்பது தமிழ்த் திரையுலகை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான, ’விக்ரம் வேதா’, ’மீசைய முறுக்கு’ படங்களுக்கு தமிழகம் முழுவதும் நல்ல ஓபனிங் கிடைத்திருக்கிறது. இதே போல ஆங்கில படமான, கிறிஸ்டோபர் நோலனின், ’டுன்கிர்க்’, சாய் பல்லவி நடித்துள்ள தெலுங்கு படமான, ‘பிடா’ ஆகிய திரைப்படங்களும் நல்ல ஓபனிங்கை பெற்றுள்ளன.
ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக டிக்கெட் விலை அதிகரித்துள்ளதால், ரசிகர்கள் தியேட்டருக்கு வருவது குறையும் என்ற நிலை இருந்தது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வெளியான படங்கள் அந்தப் பாதிப்பில் இருந்தன. ஆனால், விக்ரம்வேதா, மீசைய முறுக்கு படங்கள் நல்ல வசூலை பெற்றிருப்பது திரைத்துறையினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘நல்ல கதையை கொண்ட படங்களாக இருந்தால் ரசிகர்கள் தியேட்டருக்கு தேடி வருவார்கள் என்பதை இந்தப் படங்கள் நிரூபித்திருக்கின்றன’ என்கிறார்கள் சினிமா துறையினர்.
‘கடந்த மூன்று நாட்களாக, இந்தப் படங்கள் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கின்றன. வரும் வாரம் வரை ஹவுஸ்புல்லாக புக்கிங் நடந்துள்ளது’ என்கிறார் ஈசிஆர் தியேட்டர் ஒன்றின் மேலாளர்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!