”தற்போதைய கொரோனா நடவடிக்கைகள் பலன் தரவில்லையெனில் கூடுதல் கட்டுப்பாடுகள்” - தமிழக அரசு

”தற்போதைய கொரோனா நடவடிக்கைகள் பலன் தரவில்லையெனில் கூடுதல் கட்டுப்பாடுகள்” - தமிழக அரசு
”தற்போதைய கொரோனா நடவடிக்கைகள் பலன் தரவில்லையெனில் கூடுதல் கட்டுப்பாடுகள்” - தமிழக அரசு

கொரோனாவை தடுக்க தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பலன் தரவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு விதிக்க நேரிடும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா 2வது அலையை சமாளிக்க அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். கொரோனாவை தடுக்க தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பலன் தரவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு விதிக்க நேரிடும். 

முன்னதாக, முன்கள பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு அனுமதியளித்துள்ள நிலையில், ஏப் 14 முதல் 16 வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி திருவிழா நடத்தப்படும்”  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த நாளை முதல் புதிய கட்டுபாடுகள் அமலுக்கு வரும் நிலையில் தமிழக அரசு இவ்வாறான அறிக்கையை வெளியிட்டுள்ளது. முன்னதாக, கொரோனா பரவல் அதிகரிப்பால் நேற்று புதியகட்டுபாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது.

 • கொரோனா பரவல் நாடுமுழுவதும் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு தொடர்ந்து இருந்து வந்தது. அதனடிப்படையில் சமீபத்தில் தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மறு உத்தரவு வரும் வரை தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம்:
 • மதம் சார்ந்த கூட்டங்கள், திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 • கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லரை வியாபாரக் கடைகள் வரும் 10 ஆம் தேதி முதல் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 • திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி. இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி.
 • தியேட்டர்களில் மீண்டும் 50 சதவீத இருக்கை மட்டுமே செயல்பட வேண்டும்.
 • தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
 • மத்திய உள்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை தொடரும்.
 • பேருந்துகளில் பயணிகள் நின்றவாறு பயணிக்க அனுமதி இல்லை.
 • ஷாப்பிங் மால்கள், பெரிய கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
 • வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம்.
 • வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி.
 • உணவகங்கள், தேனீர் கடைகளில் இரவு 11 மணிவரை 50 சதவீத பேர் அமர்ந்து உணவு உண்ண அனுமதி.
 • பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றில் 50% அனுமதி.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com