
கர்நாடக மாநிலத்தில் 8 இடங்களில் ஏப்ரல் 10 முதல் 20ஆம் தேதிவரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப் படுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகரித்துவரும் நிலையில் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்குகளுடன் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தமிழ்நாட்டிலும் வருகிற 10ஆம் தேதிமுதல் இரவுநேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திலும் இரவு 10 மணிமுதல் காலை 5 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும் என முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
பெங்களூரு, மைசூரு, மங்களூரு, உடுப்பி உள்ளிட்ட 8 இடங்களில் இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்துள்ளார். இந்த இரவுநேர ஊரடங்கின்போது அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.