Published : 08,Apr 2021 02:34 PM
ரசிகரின் குழந்தைக்கு ‘துருவன்’ என பெயரிட்ட விஜய் சேதுபதி!

தனது ரசிகரின் குழந்தையை முத்தமிட்டு ‘துருவன்’ என்று பெயரிட்டுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோக்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மாஸ்டர்’, தெலுங்கில் ‘உப்பெனா’ உள்ளிட்ட படங்கள் வசூல் சாதனை செய்ததோடு பாராட்டுகளையும் குவித்தன.
விரைவில் மறைந்த இயக்குநர் ஜனநாதன் இயக்கத்தில் ‘லாபம்’, ‘மாமனிதன்’ படங்கள் வெளியாகவிருக்கின்றன. தற்போது, ‘மாநகரம்’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘மும்பைக்கர்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.
இதனிடையே, தனது தர்மபுரி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த சிலம்பு என்பவரின் கோரிக்கையை ஏற்று, அவரது ஆண் குழந்தைக்கு ‘துருவன்’ என்று பெயரிட்டுள்ளார் விஜய் சேதுபதி. அவர் குழந்தை துருவனை முத்தமிடும் வீடியோவும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.