Published : 24,Jul 2017 03:34 AM

10 பேரை பலி கொண்ட கொடுங்கையூர் தீ விபத்து

chennai---kodungaiyur-fire-accident--death-count-rises

சென்னை கொடுங்கையூரில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழப்பு 10-ஆக அதிகரித்துள்ளது. 

சென்னை கொடுங்கையூர் பேக்கரி தீவிபத்தில் படுகாயமடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நரேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக, கடந்த 15ஆம் தேதி கொடுங்கையூரிலுள்ள பேக்கரியில் நடந்த தீவிபத்தில் பலர் படுகாயமடைந்தனர். தீயை அணைக்க வந்தபோது சிலிண்டர் வெடித்ததில் தீயணைப்பு வீரர் ஏகராஜ் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை பரமானந்தம், அபிமன்யூ, கடை உரிமையாளர் ஆனந்த் உள்ளிட்ட பத்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த 14 பேரில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்