[X] Close

கழிப்பறை இல்லை என்றால் மனைவியை விற்றுவிடு: மாஜிஸ்டிரேட் பேச்சு

Sell-your-wife-if-you-don-t-have-money-to-build-toilet--a-Bihar-DM-tells-villagers

கழிப்பறை இல்லையென்றால், வீட்டில் இருக்கும் மனைவியை விற்றுவிடு என்று பீகார் மாநில மாஜிஸ்ட்ரேட் கன்வான் தனுஜ் கூறியுள்ளார்.

பீகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்ட மாஜிஸ்டிரேட் கன்வால் தனுஜ், கழிப்பறை கட்டுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது கழிப்பறை கட்டுவதன் அவசியம் குறித்து பேசினார். பீகார் அரசு கழிப்படம் கட்டுவதற்கு 12,000 ரூபாய் நிதியுதவி அளிப்பது குறித்து கூறிய தனுஜ், ரூ.12 ஆயிரம் செலவிட்டால் கழிப்பறை கட்டிவிடலாம். இந்த ரூ.12 ஆயிரத்தை விட தங்கள் மனைவியை தாழ்வாக நினைப்பவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று கேட்டார். அப்போது அங்கு இருந்த ஒருவர் கழிப்பறை கட்டுவதற்கு பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதற்கு தனுஜ் கழிப்பறை இல்லையென்றால், வீட்டில் இருக்கும் மனைவியை ஏலத்தில் விற்றுவிட்டு, அதன் பிறகு கழிப்பறை கட்ட பணமில்லை என்று சொல்லுங்கள் என கூட்டத்தில் பேசினார்.


Advertisement

Advertisement
[X] Close