1952 முதல் 2021 வரை நடைபெற்ற அனைத்து சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் 105 வயது முதியவர் தவறாமல் வாக்களித்து வருகிறார்.
கோவை கருப்பராயன் பாளையத்தை சேர்ந்த மாரப்பன் 1916ஆம் ஆண்டு ஜுன் 1ஆம் தேதி பிறந்தார். தற்போது இவருக்கு 105 வயதாகிறது. இந்நிலையில், மாரப்பரின் பெற்றோர், அவர் பிறந்த தேதி உள்ளிட்ட விபரங்கள் தமிழில் ஓலையில் எழுதி வைத்திருக்கின்றனர்.
விவசாயியான மாரப்பருக்கு 1 மகன், 3 மகள்கள், 4 பேரன்கள் மற்றும் 4 பேத்திகள் உள்ளனர். காமராஜர் மற்றும் காந்தியடிகள் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களின் பங்களிப்புகளை பார்த்த இவர், மக்களுக்கு நல்லது செய்யும் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்ய அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி தள்ளாத வயதிலும் தனது வீட்டிலிருந்து 2000 அடி தூரம் நடந்து சென்று, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளோடு ஜனநாயகக் கடமையாற்றினார்.
105 வயதானவர், வாக்களித்து செல்கிறார் என தேர்தல் நடத்தும் அலுவலர் சொன்னதும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றனர். 105 வயதில் ஓட்டுப்போட்டு திரும்பியவரை, கருப்பராயன்பாளையத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் பெருமையோடு பார்த்தனர்.
Loading More post
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
கருணாநிதி சிலை இருக்கும் வரை வெங்கையா நாயுடுவின் பெயர் வரலாற்றில் இருக்கும் - துரைமுருகன்
’அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை’..கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஒலித்த கேஜிஎஃப் பாடல்!
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?