[X] Close

பெரியாருக்கு பதிலாக மோடியை ஆசானாக ஏற்றுக்கொண்டதா அதிமுக?- ப.சிதம்பரம் கேள்வி

சுடச்சுட

Why-AIADMK-did-not-condemn-BJP-leader-s-speech-on-Periyar-As-questioned-by-P--Chidambaram

'பெரியார் குறித்த பாஜக தலைவரின் பேச்சை அதிமுக கண்டிக்காதது ஏன்?' என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.


Advertisement

இதுதொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், திராவிடக் கட்சி என கூறிக் கொள்ளும் அதிமுக, பெரியார் குறித்த பாஜக தலைவரின் பேச்சை ஏன் கண்டிக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். பெரியாருக்கு பதிலாக பிரதமர் மோடியை ஆசானாகவும், வழிகாட்டியாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஏற்றுக்கொண்டனரா எனவும் ப.சிதம்பரம் வினவியுள்ளார்.

தமிழ் நாகரிகத்தையும், தமிழர் தன்மானத்தையும் மீட்டவர் பெரியார் என்றும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக நீதியை பெற்றுத் தந்தவர்கள் பெரியார், காமராஜர், அண்ணா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெரியார் குறித்து பாஜக தலைவரும், எம்.பி.யுமான ஒருவர் கூறியதை வன்மையாக கண்டித்துள்ள ப.சிதம்பரம், சனாதன தர்மம் என்ற நச்சுக் கொள்கையை எதிர்த்து போராடி வென்றவர் பெரியார் எனவும் பெருமிதம் தெரிவித்துள்ளார். பெரியாரின் கொள்கையை ஒழிக்கவே பாஜக தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதாக அக்கட்சியின் பெங்களூரு எம்.பி. தேஜஸ்வி சூர்யா தெரிவித்து இருந்தார்.


Advertisement


Advertisement

Advertisement
[X] Close