Published : 05,Apr 2021 07:39 AM
நாமக்கல்: திமுக வேட்பாளரின் நண்பர் வீட்டில் ரூ.35 லட்சம் பறிமுதல்

குமாரப்பாளையம் திமுக வேட்பாளரின் நண்பர் வெங்கடாசலம் வீட்டில் ரூ. 35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வெங்கடாசலத்தின் நண்பர்கள் வெடியரசம்பாளையத்தினை சேர்ந்த செங்கோட்டையன் மற்றும் அவரது மகன் வெங்கடாச்சலம். இவர்கள் வெப்படை பகுதிகளில் சோலா ஸ்பின்னிங் மில் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், தந்தை மற்றும் மகன் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். தேர்தல் சமயத்தில் பணப்பட்டுவாடா செய்வதற்காக நண்பர்கள் வீட்டில் பணம் பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடைபெற்றுள்ளது.
இந்த சோதனையில் நாமக்கல் மாவட்ட வருமான வரித்துறையினர் தலைமையிலான 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் நண்பர் வெங்கடாசலம் வீட்டில் ரூ. 35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.