Published : 26,Jan 2017 10:44 AM
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டி: இந்திய அணி பேட்டிங்

இந்திய அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் பீல்டிங் தேர்வு செய்தார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இந்தநிலையில், கான்பூர் மைதானத்தில் இவ்விரு அணிகள் பங்கேற்கும் முதல் டி20 போட்டி தொடங்கியது. அதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. இந்த போட்டியின் மூலம் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பர்வேஸ் ரசூல் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பில் அறிமுகமாகிறார்.
இந்திய அணி வீரர்கள் விபரம்:
கே.எல்.ராகுல், விராத் கோலி, எம்.எஸ்.தோனி, யுவராஜ் சிங், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, சுரேஷ் ரெய்னா, பர்வேஸ் ரசூல், யுஷ்வேந்திர சஹால், ஆஷிஷ் நெஹ்ரா, ஜஸ்ப்ரித் பும்ரா