[X] Close

“அப்பாவுக்கு வயதாகிவிட்டது; பிடிக்காமல் அரசியலுக்கு வந்துள்ளேன்” - வைகோ மகன் துரை வையாபுரி

சுடச்சுட

vaiko-son-durai-vaiyapuri-campaign-dmk-kkssr-ramachandran

பிடிக்காமல் காலச்சூழலில் அரசியலுக்கு வந்துள்ளேன். ஆனால் பிடிக்காத அரசியலையும் சிறப்பாக செய்யவேண்டும் என நினைக்கிறேன் என்று வைகோ மகனும் நட்சத்திர பேச்சாளருமாகிய துரை வையாபுரி தெரிவித்தார்.


Advertisement

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகனும் நட்சத்திர பேச்சாளருமாகிய துரை வையாபுரி அருப்புக்கோட்டை சின்னபுளியம்பட்டி, ஆத்திப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் நின்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய துரை வையாபுரி “மற்ற தொகுதி பிரச்சாரங்களை ஒதுக்கி வைத்து விட்டு கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்காக பிரச்சாரம் செய்ய வந்துள்ளேன். அருப்புக்கோட்டையில் குடிநீர் பிரச்னை உள்ளது. திமுக தான் ஆட்சிக்கு வரும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் முக்கிய இலாகாவின் அமைச்சராவது உறுதி.

கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் அதிமுக அரசு இந்த தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. வைகை கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும். வைகோ மகனாகிய நான் தேர்தலில் போட்டியிட அனைவரும் விரும்பினர். ஆனால் நானும் அப்பாவும் வேண்டாம் என முடிவு செய்தோம்.


Advertisement

image

கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் நான் தேர்தலில் போட்டியிடவில்லை என கேள்விப்பட்டதும் மிகவும் ஆதங்கப்பட்டார். எனக்கு அரசியலில் விருப்பமில்லை. காலச்சூழல் காரணமாக அரசியலுக்கு வந்தேன். என் அரசியல் எதிர்காலத்திற்கு கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனே உறுதுணையாக இருப்பார். நான் ஓட்டு கேட்டதோடு நின்றுவிடமாட்டேன். வெற்றி பெற்றதும் மீண்டும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுடன் வருவேன். வந்து உங்கள் அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து வைப்பேன். அப்போது தான் மக்கள் என்னை நம்புவார்கள். நான் எங்கெல்லாம் சென்று பிரச்சாரம் செய்தேனோ அங்கெல்லாம் நான் கொடுத்த வாக்குறுதிகளை டைரியில் எழுதி வைத்துள்ளேன். அனைத்தும் நிறைவேற்றுவேன்.

பிடிக்காத அரசியலுக்கு அப்பாவிற்காக வந்துள்ளேன். ஆனால் பிடிக்காத ஒன்றையும் சிறப்பாக செய்ய வேண்டும் என நினைக்கிறேன். புளியம்பட்டி மக்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். அப்பாவிற்கு வயதாகிவிட்டது. அவருக்கு ஆதரவாகவே நான் அரசியலுக்கு வந்துள்ளேன். எனக்கு உறுதுணையாக இருக்கப்போவது கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தான். அவருக்கு நீங்கள் வாக்களித்து வெற்றி பெறச்செய்யவேண்டும்” என்றார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close