டெல்லியில் முழுநேர ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் முழுநேர ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை: அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் முழுநேர ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் மீண்டும் முழுநேர ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தலைநகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய இல்லத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சத்யேந்திர ஜெயின் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அரவிந்த் கெஜ்ரிவால்...

டெல்லியில் மீண்டும் கொரோனா தொற்று உயர்வது, நான்காவது அலையை காட்டுவதாகத் தெரிவித்தார். டெல்லியில் மீண்டும் முழு நேர ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை எனக் கூறிய அவர், கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com