[X] Close

’ஐயப்ப பக்தர்களை லத்தியால் வரவேற்றுள்ளார்கள்’ - கேரள இடதுசாரி அரசு மீது பிரதமர் சாடல்

பொதுக்களம்

-Ayyappa-devotees-are-welcomed-by-Lathi----Prime-Minister-Modi-s-speech-in-Kerala

தேர்தல் பிரச்சாரத்திற்காக கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி ’மலர்களால் வரவேற்கப்பட வேண்டிய ஐயப்ப பக்தர்களை லத்திகளால் வரவேற்றார்கள்’ என்று இடதுசாரி கூட்டணி அரசை விமர்சித்துள்ளார்.


Advertisement

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் மற்றும் கேரளாவில் இன்று ஒரே நாளில் 4 பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார். இரு மாநிலங்களிலும் தலா 2 பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற திட்டமிட்டுள்ளார். மதுரையில் பாண்டிகோவில் சுற்றுச்சாலை அருகே இன்று காலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாஜக, அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பரப்புரை செய்தார். மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த அதிமுக பாஜக, பாமக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பரப்புரை செய்தார்.

12.20 மணியுடன் பிரச்சார பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறும் திடல் அருகே அமைக்கப்பட்டுள்ள ஹெலிப்பேடிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா மாநிலம் பத்தனம்திட்டா சென்றார். பத்தனம்திட்டா பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேசுகையில், “மலர்களால் வரவேற்கப்பட வேண்டிய ஐயப்ப பக்தர்களை லத்திகளால் வரவேற்றார்கள். 


Advertisement

கேரளாவின் புனித பிம்பத்தை சிதைக்கும் வகையிலும், கலாசாரம் பின் தங்கியதாகவும் காட்ட எல்.டி.எப். (இடது முன்னணி) முயற்சி செய்கிறது. சிறு பிள்ளைத்தனமான செயல்களால் புனிதத் தலங்களில் உறுதியை குலைக்கும் வகையில் செயல்படுகிறார்கள். புறந்தள்ளப்பட்ட கொள்கையை வைத்துக் கொண்டு கலாசாரத்தை சிதைப்பதை அனுமதிக்க முடியாது” என்று பேசியுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close