Published : 02,Apr 2021 02:26 PM
பிரியங்கா காந்தியின் தமிழக தேர்தல் பிரச்சாரம் ரத்து!

தமிழக தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் முதன்முறையாக கலந்துகொள்ளவிருந்த பிரியங்கா காந்தியின் தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 6-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி பிரியங்கா காந்தி ஏப்ரல் 3 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவிருந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்தார்.
हाल में कोरोना संक्रमण के संपर्क में आने के चलते मुझे अपना असम दौरा रद्द करना पड़ रहा है। मेरी कल की रिपोर्ट नेगेटिव आई है मगर डॉक्टरों की सलाह पर मैं अगले कुछ दिनों तक आइसोलेशन में रहूँगी। इस असुविधा के लिए मैं आप सभी से क्षमाप्रार्थी हूँ। मैं कांग्रेस विजय की प्रार्थना करती हूँ pic.twitter.com/B1PlDyR8rc
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) April 2, 2021
இந்நிலையில், அவரது கணவர் ராபர்ட் வதேராவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், பிரியங்கா காந்திக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என்று வந்தாலும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் வீடியோ மூலம் தெரிவித்திருக்கிறார். இதனால், அவரது தமிழக வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.