[X] Close

ஐடி ரெய்டுக்கு எதிர்ப்பு: திமுகவினர் சாலை மறியல்

சுடச்சுட

Stalin-daughter-home-was-searched-by-income-tax-officials

அண்ணாநகர் திமுக வேட்பாளர் மகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றும் வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாநகரில் திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் துணை ராணுவ படை பாதுகாப்புடன் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக் வீட்டிலும் ஐடி சோதனை நடந்து வருகிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சென்னை அண்ணாநகரில் திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


Advertisement

image

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறும்போது, “ ரெய்டு பாஜக கூட்டணியின் தோல்வி பயத்தின் விளைவு. திட்டமிட்ட பழைவாங்கும் போக்கு” என்றார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறும்போது, “ ரெய்டு போன்ற பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக பயப்படாது.” என்றார்.


Advertisement

Advertisement
[X] Close