ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருந்து விலகிய கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தார்.
ஓ.பன்னீர்செல்வம் அணியில் தனக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என கூறி அங்கிருந்து எம்.எல்.ஏ ஆறுக்குட்டி வெளியேறினார். இந்நிலையில் இன்று சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அவரது முன்னிலையில் அதிமுக அம்மா அணியில் ஆறுக்குட்டி எம்எல்ஏ இணைந்தார். முன்னதாக அவர் இவ்விவகாரம் குறித்து தனது தொகுதி மக்களிடம் நேற்று கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஓபிஎஸ் அணியில் தனக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என புகார் தெரிவித்த ஆறுக்குட்டி, தனது தொகுதிக்குட்பட்ட மாங்கரை பகுதி மக்களிடம் தான் எந்த அணியில் இணையவேண்டும் என்பது குறித்து கருத்துகளை கேட்ட பின்னரே எடப்பாடி அணியில் தற்போது இணைந்துள்ளதாக கூறினார். மேலும் மக்கள் அனைவரும் தன்னுடைய முடிவில் மிகவும் சந்தோஷமடைந்துள்ளதாகவும் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி தெரிவித்தார்.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்