[X] Close

சென்னையில் குட்கா விற்பனை - 4 நாட்களில் 722 வழக்குகள்!

gutka-seized-in-chennai

சென்னையில் 4‌நாட்களில் நடைபெற்ற சோதனை‌யில் தடை செய்யப்‌பட்ட குட்கா விற்பனை செய்தது தொடர்பாக 722 ‌வழக்குகள் ‌பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் போதைப் பாக்குகள் விற்பனையைத் தடை செய்ய தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், ஆங்காங்கே அவற்றின் விற்பனை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில்,
சென்னை பெரு‌நகர காவல்துறை சார்பில், பல்வேறு இடங்க‌ளில் குட்கா விற்பனை‌யை‌ முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் குட்கா பொ‌ருட்கள் விற்பனை செய்த மற்றும் ப‌துக்கி‌ வைத்திருந்த குற்றத்திற்‌‌காக 750 குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்ப‌ட்டுள்ள‌னர். கைது செய்யப்ப‌ட்டுள்ள‌ நபர்களி‌டம் இருந்து‌ 10 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பி‌லான தடை செய்யப்பட்ட குட்கா ‌பொருட்கள் பறிமுதல் செய்யப்ப‌ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

Advertisement
[X] Close