Published : 26,Jan 2017 09:34 AM

முனைவர் பட்டத்தை மறுத்த ராகுல் டிராவிட்

Rahul-Dravid-declines-honorary-doctorate--wants-to-earn-one-through-research

பெங்களூரு பல்கலைக்கழகம் அளிக்க முன்வந்த கௌரவ முனைவர் பட்டத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் மறுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று அறியப்பட்ட ராகுல் டிராவிட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றபின்னர், தற்போது 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ராகுல் டிராவிட்டுக்கு பெங்களூரு பல்கலைக்கழகம் கௌரவ முனைவர் பட்டத்தை அளிக்க முன்வந்தது. ஆனால் முனைவர் பட்டத்தை வேண்டாம் என்று தன்மையாக மறுத்த டிராவிட், கிரிக்கெட் போட்டிகள் குறித்து ஆய்வினை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற இருப்பதாக விளக்கமளித்துள்ளார். தானாக தேடி வந்த முனைவர் பட்டத்தை ஏற்க மறுத்த டிராவிட்டின் இந்த செயலை நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்