தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் தான் எதுவும் பேசவில்லை என தேர்தல் ஆணையத்திற்கு ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாய் குறித்தும் அவரது பிறப்பு குறித்தும் திமுக எம்.பி ஆ.ராசா பரப்புரையில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஆ.ராசா அவரின் பேச்சு குறித்து விளக்கமளித்ததோடு முதலமைச்சர் உண்மையிலேயே கலங்கியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன் என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ஆ.ராசா விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கோரியிருந்தது. இந்நிலையில் ஆ.ராசா தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “உவமானம் என்ற முறையிலேயே மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமியை ஒப்பிட்டு பேசினேன். முதல்வர் கண்கலங்கியது அறிந்து மன்னிப்பும் கோரியுள்ளேன். தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் நான் எதுவும் பேசவில்லை. எனது பேச்சின் முழு வீடியோவையும் பார்த்தால் தற்போதைய குற்றச்சாட்டு அரசியல் ரீதியாக திரித்து வெளியிடப்பட்டது தெரியும்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அந்த கடிதத்தில் 3 கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தார். அதாவது, “அதிமுகவினர் என்மீது என்னென்ன புகார்கள் வைத்துள்ளனர் என்பதை எனக்கு விளக்கமாக சொல்லுங்கள். அப்போதுதான் என்னால் விளக்கமாக பதில் அளிக்க வாய்ப்பு இருக்கும். எனது வழக்கறிஞருடன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் கொடுக்க வேண்டும். நான் என்ன தவறாக பேசினேன் என்பதை எழுத்துப்பூர்வமாக தெரிவியுங்கள்” எனவும் கோரியுள்ளார்.
Loading More post
'சீனா கட்டும் பாலத்தை பார்க்க ட்ரோன்களை அனுப்புங்கள்'- பிரதமர் மோடிக்கு ஓவைசி பதில்
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?