"மும்பை இந்தியன்ஸை தோற்கடிப்பது சிரமம்; செம்ம ஃபார்மில் இருக்கிறார்கள்" - சுனில் கவாஸ்கர்

"மும்பை இந்தியன்ஸை தோற்கடிப்பது சிரமம்; செம்ம ஃபார்மில் இருக்கிறார்கள்" - சுனில் கவாஸ்கர்
"மும்பை இந்தியன்ஸை தோற்கடிப்பது சிரமம்; செம்ம ஃபார்மில் இருக்கிறார்கள்" - சுனில் கவாஸ்கர்

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை வெல்வது அவ்வளவு எளிதான காரியமில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முனனாள் வீரர் சுனிஸ் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து "ஸ்டார் ஸ்போர்ட்ஸ்" தொலைக்காட்சியில் பேசிய அவர் " மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்துவது கடினம் என்று நினைக்கிறேன். இந்த அணி வீரர்கள் பார்முக்கு வந்ததை நாம் பார்த்தோம். இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், பேட்டிங்கை டி20, ஒருநாள் போட்டிகளில் பார்த்தோம். குறிப்பாக ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் பவுலிங் பார்முக்கு திரும்பியது மிக முக்கியமானது" என்றார் சுனில் கவாஸ்கர்.

மேலும் பேசிய அவர் " அமீரகத்தில் நடந்த ஐபிஎல் 2020 தொடரில் மும்பை இந்தியன்ஸ் ஏறக்குறைய தோற்கடிக்க முடியாத அணியாகத் திகழ்ந்தது, அதனால் இந்த முறையும் தொடக்கத்திலேயே சாம்பியன் அணி என்ற சாதகமான நிலையை மும்பை அடைந்துள்ளது. ஹர்திக் பாண்ட்யா பவுலிங் செய்வது இந்திய கிரிக்கெட்டுக்கும் முக்கியமானது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இன்னும் சில காலம் உள்ளது, அதற்குள் ஹர்திக் தயாராகிவிட்டால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலம்" என்றார் சுனில் கவாஸ்கர்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 14-வது சீசன், ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கி மே 30-ம் தேதி நிறைவடைகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூரு ஆகிய 6 நகரங்களில் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. எனினும் கொரோனா தொற்று காரணமாக, முன்னெச்சரிக்கையாக தொடக்க ஆட்டங்களில் ரசிகர்களுக்கு அனுமதி அளிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸும் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com