[X] Close

இந்தியாவில் ஒரே நாளில் 53,480 பேருக்கு புதிதாக தொற்று

இந்தியா,கொரோனா வைரஸ்

Raise-in-corona-cases-at-India-for-past-24-hours

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 53, 480 ஆகவும், நோய் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 354ஆகவும் அதிகரித்துள்ளது.


Advertisement

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 53, 480 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியே 21 லட்சத்து 49 ஆயிரத்து 335ஆக உயர்வு கண்டுள்ளது. அதே வேளையில் 41 ஆயிரத்து 280 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் இதுவரை 1 கோடியே 14 லட்சத்து 34 ஆயிரத்து 301 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் இந்தியாவில் அதிகபட்சமாக 354 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இது ஒரு புறமிருக்க தடுப்பூசி போடும் பணியும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நாளில் 19.40 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும், இதுவரை 6.3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close