Published : 23,Jul 2017 02:05 AM
சோட்டா ராஜனின் கூட்டாளி கைது

உத்தரப்பிரதேசத்தில் நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் கும்பலை சேர்ந்த முக்கியமான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் கும்பலை சேர்ந்த கான் முபாரக் என்பவரை உத்தரபிரதேச சிறப்பு அதிரடிப் பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிப் பொருட்ளையும் போலீஸாரை பறிமுதல் செய்தனர். சோட்டா ராஜனின் கும்பலில் பணியாற்றி வந்த இவர் எதிரிகளை துல்லியமாக துப்பாக்கியால் சுட்டு கொலை செய்வதில் வல்லவர் ஆவார். இதுவரை சோட்டா ராஜனின் எதிரியாக கருதப்படும் பலரை முபாரக் கொலை செய்துள்ளது விசாரணை தெரியவந்துள்ளது. பல அரசியல் புள்ளிகள் மற்றும் தொழிலதிபர்களும் இந்த பட்டியலில் அடங்குவார்கள் என்பதால், முபாரக்கை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.