Published : 23,Jul 2017 01:36 AM
99 ஆண்டுகளுக்குப் பிறகு முழு சூரிய கிரகணம்: நாசா பாதுகாப்பு அறிவுரை

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நீள் வட்டப்பாதையை நிலவு கடக்கும் போது சூரியனின் ஒளியை நிலவு மறைக்கும் நிகழ்வுக்கு சூரிய கிரகணம் என்று பெயர். இதில் முழு கிரகணம், பகுதி கிரகணம், கங்கண கிரகணம், கலப்பு கிரகணம் என பல வகைகள் உண்டு.
வரும் ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி முழு சூரிய கிரகணம் தோன்றும் என நாசா அறிவித்துள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால் 99 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றும் முழு சூரிய கிரகணம் இதுவாகும்.
சூரிய கிரகணத்தை பார்க்க உள்ள மக்களுக்கு நாசா சில பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 21ல் தோன்றவுள்ள முழு சூரிய கிரகணத்தில் சூரியனின் விளிம்புகள் மட்டுமே தெரியும். இதை வெற்றுக் கண்களால் பார்க்கக் கூடாது என்றும் அதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள சூரிய ஒளித் தடுப்புக் கண்ணாடிகளை அணிந்து மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் நாசா அறிவுறுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 30 கோடி மக்களால் கிரகணத்தை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.