[X] Close

தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பவர்களை பதவிகள் தேடிவரும்: முதலமைச்சர் பழனிசாமி

CM-Speech-in-Tirupur

அதிமுகவில் தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பவர்களை பதவிகள் தேடிவரும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.


Advertisement

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நலனுக்காக திரை ஊடகத்தை பயன்படுத்தியவர் எம்ஜிஆர் என குறிப்பிட்டார். திரையுலகில் புகழின் உச்சம் தொட்டதுபோல் அரசியலிலும் புகழின் உச்சத்தை தொட்டவர் என்று எம்ஜிஆருக்கு புகழாரம் சூட்டினார்.

அதிமுக-வில் தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பவர்களை பதவிகள் தேடிவரும் என்ற அவர், இன்றைக்கும் அதிமுக இரும்பு கோட்டையாக இருப்பதற்கு காரணம் அதன் தொண்டர்கள் தான் என்றும் தெரிவித்தார். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு நடப்பு ஆண்டு டிசம்பரில் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கும் என்றும் முதலமைச்சர் கூறினார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close