Published : 30,Mar 2021 06:57 PM
மோசமான ஆட்சியால் முதல்வருக்கே காங்கிரஸில் சீட் இல்லை: புதுச்சேரியில் மோடி உரை

புதுச்சேரியில் முதல்வராக இருந்தவருக்கே இப்போது தேர்தலில் சீட் வழங்கப்படவில்லை, மோசமான ஆட்சியை கொடுத்ததால் தான் அவருக்கே சீட் வழங்கப்படவில்லை என பிரதமர் மோடி தெரிவித்தார்
புதுச்சேரியில் நடைபெறும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி “பல ஆண்டுகளாக செயல்படாத காங்கிரஸ் மாநில அரசுகளில் முக்கியமான இடம் புதுச்சேரிக்கு உண்டு. கல்வி, பட்டியலின மக்களுக்கான இடங்களை ஒதுக்குவது உள்ளிட்ட எல்லா துறைகளிலும் புதுச்சேரியில் ஊழல் மிகுந்துள்ளது. இங்கு ஆட்சி செய்த முந்தைய காங்கிரஸ் அரசு எல்லா துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளது, இதனைப்பல காங்கிரஸ் எம்.எல்.ஏக்களே வெளிப்படையாக தெரிவித்தனர்.
இதுவரை சந்தித்த தேர்தல்களிலேயே புதுச்சேரி தேர்தல் புதுமையானது, ஏனென்றால் இந்த மாநிலத்தின் முதல்வருக்கே இப்போது தேர்தலில் சீட் வழங்கப்படவில்லை, மோசமான ஆட்சியை கொடுத்ததால் தான் அவருக்கே சீட் வழங்கப்படவில்லை” என தெரிவித்தார்