[X] Close

நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்று படமான ’ராக்கெட்ரி’ ட்ரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சினிமா

Madhavan-s-Rocketry----The-Nambi-Effect----trailer-on-April-1

நடிகர் மாதவன் இயக்கி நடிக்கும் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ’ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ படத்தின் ட்ரைலர் வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கிறார் நடிகர் மாதவன்.


Advertisement

கிரையோஜனிக் ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு விற்றதாக இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கடந்த 1994 ஆம் ஆண்டு கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் நம்பி நாராயணன் இவ்வழக்கில் நிரபராதி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது நம்பி நாராயணனுக்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனக் கூறி இருந்தது.கேரளாவில் சட்டத்துக்குப் புறம்பாக கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கு உள்ளானதாக திருவனந்தபுரம் சார்பு நீதிமன்றத்தில் நம்பி நாராயணன் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் சமரசம் செய்து கொள்ள ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கேரள முன்னாள் முதன்மைச் செயலாளர் ஜெயக்குமார் அரசுக்கு சிபாரிசு செய்தார். இதனை ஏற்ற கேரள அமைச்சரவை, அந்தப் பணத்தை தர ஒப்புதல் அளித்து பணத்தையும் வழங்கியது. இதனால், நம்பி நாரயணன் மீதான மதிப்பு மக்களிடத்தில் உயர்ந்தது.

image


Advertisement

இந்நிலையில் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்கையை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளதாக நடிகர் மாதவன் அறிவித்திருந்தார். அப்போது, அவர் வெளியிட்ட வீடியோவில் “இந்த உலகத்தில் எவ்வளவோ கதைகள் இருக்கு. அதில் பல கதைகளை நீங்கள் கேட்டிருக்கலாம். பல கதைகள் உங்க காதுக்கே வராம போயிருக்கலாம். ஆனால் சில கதைகள் பத்தி நீங்க தெரிஞ்சுக்காம இருக்கிறது உங்களுக்கு இந்த நாட்டு மேல இருக்குற அக்கறை இல்லாம இருக்குறதுக்கு சமம். நம்பி நாராயணன். இவருடைய கதையை நீங்க கேட்டீங்கன்னா, இவருடைய சாதனையை நீங்க பார்த்தீங்கன்னா, உங்களால பேசாம இருக்க முடியாது. ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் ’ பத்தி தெரிஞ்சுக்காம இருக்குறவங்க தெரிஞ்சுக்குவாங்க. தெரியும்னு நினைக்குறவங்க கேட்டு மிரண்டு விடுவாங்க.” என்று பேசியிருந்தார். இந்நிலையில், படத்தின் ட்ரைலர் ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார் நடிகர் மாதவர். இப்படத்தை இயக்குவதோடு தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் இருக்கிறார் மாதவன். சிம்ரன் ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

image

ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் என தலைப்பிட்டுள்ளனர். இதனை அக்ஸர் மற்றும் தில் மாங்கே மோர் போன்ற படங்களை இயக்கிய ஆனந்த மஹாதேவன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை பற்றிய வேறு தகவல்கள் எதையும் அவர் தெரிவிக்கவில்லை. ஆனால் சமீபத்தில் பத்திரிகை செய்திகளில் சூடான செய்தியாக வலம் வந்த இஸ்ரோ விஞ்ஞானியின் கதை என்பதை மட்டும் தெரிவித்துள்ளதால் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close