அதிமுக, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை - தாராபுரம் வந்தார் பிரதமர் மோடி!

அதிமுக, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை - தாராபுரம் வந்தார் பிரதமர் மோடி!
அதிமுக, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை - தாராபுரம் வந்தார் பிரதமர் மோடி!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி திருப்பூர் மவட்டம் தாராபுரத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக தாராபுரம் வந்தார் பிரதமர் மோடி. 

கூட்டணி தலைவர்கள் என்ற முறையில் , அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் , அதிமுக இணை ஒருங்கினைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி , த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர்களும் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. 

இந்த மேடையில் மொத்தம் 13 வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு , பிரதமர் நரேந்திர மோடி பரப்புரை மேற்கொள்வார் என பா.ஜ.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாராபுரத்தில் பாஜக தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FPutiyaTalaimuraimagazine%2Fvideos%2F483452436238163%2F&show_text=false&width=560" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com