[X] Close

சென்னையில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: 2 இடங்களில் 33 பேருக்கு தொற்று உறுதி!

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

The-spread-of-corona-virus-in-Chennai-is-starting-to-accelerate-again-

சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. இரண்டு இடங்களில் மட்டும் இன்று 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த 5 மாவட்டங்களில் மட்டும் நாள் ஒன்றுக்கு சராசரியாக புதிதாக 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தாக்கம் கண்டறியப்படுகிறது.

இந்த நிலையில்,ம இன்று சென்னையில் 2 இடங்களில் 33 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஒரு நகைப்பட்டறையில் 22 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை அண்ணா நகரில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.       


Advertisement

Advertisement

Advertisement
[X] Close